நாங்க வேற மாரி யூடியூப்பில் புதிய சாதனைபடைத்த வலிமை படத்தின் பாடல்!
வலிமை படத்தின் பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.அஜித்தின் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் பஸ்ட் லுக் வந்து ட்ரெண்டான நிலையில் படத்தின் அடுத்த அறிவிப்பு குறித்து அஜித் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் வலிமை படத்தின் முதல் பாடலான, நாங்க வேற மாரி என்ற பாடலை படக்குழு நேற்று இரவு வெளியானது.
[
இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். அஜித் ரசிகர்கள் இந்த பாடலை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர் இந்த நிலையில் யூடியூப்பில் சாதனை படைத்த வலிமை திரைப்பட பாடல் - 10 மணி நேரத்தில் 40 லட்சம் முறை பார்க்கப்பட்டு சாதனைபடைத்து வருகிறது.