அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - வலிமை படத்தின் அடுத்த அப்டேட் இதோ..!

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தில் இடம் பெறும் “நாங்க வேற மாதிரி” பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடந்து முன்னோட்ட வீடியோவும் வெளியானது. 

இந்நிலையில் வலிமை படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை படக்குழு தரப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்