வந்தாச்சு வலிமை படத்தின் அடுத்த அப்டேட் - என்னைக்கு தெரியுமா?

valimai ajithkumar valimaisecondsingle
By Petchi Avudaiappan Dec 01, 2021 04:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் 2வது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

போனிகபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து அஜித் ரசிகர்களை திக்குமுக்காட வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 

அந்த வகையில் வலிமையில் வரும் இரண்டாவது பாடல் ப்ரொமோ இன்று மாலை 7 மணிக்கு வெளியானது. இதில் நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ என்று அஜித் பேசுவது போன்று இடம் பெற்றுள்ளது. 

இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். அந்த பாடலை டிசம்பர் 5 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.