வலிமை படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் - சோகத்தில் ரசிகர்கள்

valimai Actor Ajith
By Petchi Avudaiappan Sep 15, 2021 10:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிஸ் ரிலீஸான நிலையில், விரைவில் படமானது தியேட்டர்களில் வெளியாகும் என கூறப்பட்டது.

அந்த வகையில் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று நடிகர் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த, சிம்பு நடித்துள்ள மாநாடு ஆகிய படங்களுக்கு போட்டியாக வலிமை ரிலீசாகும் என தகவல் பரவ ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

ஆனால் அண்ணாத்த படமும், வலிமை படமும் ஒரே நேரத்தில் வெளியானால் வசூல் ரீதியாக பாதிப்பு வரலாம் எனக்கருதி, வலிமை படத்தின் ரிலீசை டிசம்பர் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.