வலிமை படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? - இணையத்தில் வைரலாக பரவும் தகவல்

valimai ajithkumar வலிமை
By Petchi Avudaiappan Jan 29, 2022 04:26 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

போனிகபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒமிக்ரான் பரவலால் தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. 

அதன்படி வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. ஆனால் படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.