வெளியானது ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி ; அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவிப்பு

movie valimai announced release date boney kapoor officially
By Swetha Subash Feb 02, 2022 06:35 AM GMT
Report

ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் குமார் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் 'வலிமை'.

படத்தில் ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஹிந்தி திரையுளகின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வழங்குகிறார்.

'வலிமை' படத்தின் பணிகள் முடிந்து பொங்கலுக்கு திரையரங்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா 3-ம் அலை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ‘வலிமை’ ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வலிமை திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.