ஜூலை 15-ம் தேதி வலிமை அப்டேட் - உற்சாகத்தில் தல ரசிகர்கள்! மேலும் ஒரு சர்ப்ரைஸ் ட்ரீட்!
ஜூலை 15ம் தேதி வலிமை படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளதால் திருவிழா கொண்டாட்டத்திற்கு தல ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் வலிமை. பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பிரச்சனை துவங்கியதில் இருந்தே வலிமை படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லை. அஜித்தின் பிறந்தநாளுக்கு கூட அப்டேட் வராதது தான் ரசிகர்களை பெரும் கவலையும், கோபமும் அடைய செய்தது.
ஜுலை மாதம் வலிமை அப்டேட் வரும் என்று கூறப்பட்டது. இதையடுத்து ஜூலை 1ம் தேதி அன்று வலிமை அப்டேட் மாதம் #ValimaiFirstLookMonth என்று ட்விட்டரில் ஹேஷ்டேகை டிரெண்டாக்கி விட்டார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ஜூலை 15ம் தேதி வலிமை அப்டேட் வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 15ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

இந்நிலையில் ரிலீஸுக்கு முன்பே வலிமை படம் ரூ. 200 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் தலைப்பாக வலிமை இருக்கிறது. வலிமை குறித்து அப்டேட் வராத நிலையிலும் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.