வலிமை படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகரை மறக்க முடியாது- மனம் திறந்த மொயின் அலி

Valimai Movie Update Moeen Ali
By Thahir Sep 28, 2021 10:44 AM GMT
Report

வலிமை பட அப்டேட் குறித்து கேட்ட ரசிகரை மறக்கவே முடியாது என்று சென்னை அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்பதையும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் மொயின் அலி பேசும் வீடியோ ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வலிமை படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகரை மறக்க முடியாது- மனம் திறந்த மொயின் அலி | Valimai Movie Update Moeen Ali

கிரிக்கெட் வீரர் மொயின் அலி சில மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெஸ்ட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் திடீரென என்னை அழைத்து 'வலிமை' அப்டேட் என கேட்டார். அதை என்னால் மறக்க முடியாது என்று மொயின் அலி கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சென்னை வாசிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர்.