வலிமை படத்திற்கு ‘UA’ சான்றிதழ் : படம் எவ்வளவு நேரம் தெரியுமா?
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாவதால் நேற்று ட்ரெய்லர் கவனம் ஈர்த்தது. வெளியான 24 மணி நேரத்திற்குள் 15 மில்லியன் பார்வைகளைக் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், ‘வலிமை’ படத்திற்கு தணிக்கைக் குழுவிலிருந்து யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
அந்தச் சான்றிதழில் வெளியீட்டுத் தேதி ஜனவரி 13 எனவும் ஆக்ஷன் திரைப்படம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுக்க 700 லிருந்து 750 தியேட்டர்களில் வெளியாகும் ‘வலிமை’ 2 மணிநேரம் 58 நிமிடங்கள் 35 செகெண்ட் என கிட்டத்தட்ட 3 மணிநேரப் படமாக உருவாகியுள்ளது .