வலிமை படத்தின் முதல் பாடல் எப்போது? - வெளியான முக்கிய அப்டேட்
Valimai
Actor ajith
Valimai first single
By Petchi Avudaiappan
’வலிமை’ படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேர் கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிகர் அஜித் - இயக்குனர் ஹெச்.வினோத் - தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 2வது முறையாக வலிமை படத்தில் இணைந்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின், மோஷன் போஸ்டரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடல் அடுத்தவாரம் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 'நாங்க வேற மாதிரி' என தொடங்கும் இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாட விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.