வலிமை திரைப்படத்தில் சர்ச்சை காட்சி..ஹெச்.வினோத்,போனி கபூர் மீது புகார்..!
ValimaiMovie
Controversialscene
ValimaiProducer
BoneyKapoorH.Vinoth
By Thahir
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் கடந்த 24ம் தேதி வெளியானது வலிமை திரைப்படம்.
வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞருக்கு எதிராக காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி ஹெச்.வினோத்,போனி கபூர் மீது சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில் கடந்த 24 ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தி உள்ளதாகவும்,அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்