யூடியூப்பில் மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர்!
அஜித்தின் வலிமையின் முதல் தோற்றத்தின் போஸ்டர்கள் கடந்த 11 ஆம் தேதி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன. இந்த மோசன் போஸ்டரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் அட்டகாசமாய் இருக்கிறது. நீண்ட காத்திருப்புக்கு பின் வெளியானாலும், சூப்பராய் இருக்கும் போஸ்டர் அஜித்தின் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் வந்திருக்கிறார் தல.

இந்த போஸ்டரை பார்க்குக்ம்போது கெட்டவர்களின் கூட்டத்தினருக்கு எதிராக அஜித்தின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது தெரிகிறது. ‘சக்தி என்பது மனதின் நிலை’ என்று பஞ்ச் டயாலாகும் இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
1.23 வினாடிகள் கொண்ட வலிமை மோஷன் போஸ்டர் வீடியோ, பைக்கில் ரெய்ட் செய்யும் அஜித்தை காட்டுகிறது. படம் 2021 இல் வெளியாகும் என்று மட்டுமே தெரிவித்திருக்கும் படக்குழு, வெளியீட்டு தேதியை மட்டும் வெளியிடவில்லை. ஆனால், வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் வந்து ஹிட்டடித்தது வலிமை போஸ்டர். இதை சமூக ஊடகங்களில் பலரும் பார்த்து ரசித்து வருகின்ரானர். வெளியாகிய சில மணி நேரத்திலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் யூடியூபில் பார்த்து ரசித்தனர்.

இதுபோல இன்னும் பல சாதனைகளை செய்ய வலுவாய் தடம் பதிக்கிறது வலிமை திரைப்படம். தல அஜித்தின் தலையாய திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் வலிமை என்பதை அதன் மோஷன் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பே தெரிவிக்கிறது.
போனி கபூர் தயாரிக்கும் வலிமை திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்து வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிய நிலையில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என அஜித் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பார்ப்பை பல்வேறு
விதங்களிலும் வெளிப்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.