அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... வலிமை படத்தின் அப்டேட் இதோ..!

Valimai first look Valimai update Valimai motion poster
By Petchi Avudaiappan Jul 11, 2021 10:37 AM GMT
Report

 நடிகர் அஜித்தின் வலிமை பட மோஷன் போஸ்டர் குறித்த தகவல்களால் சமூக வலைதளங்கள் களைக்கட்டியுள்ளன.

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் அப்டேட்டை கடந்த ஓராண்டாக ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள அஜித் ரசிகர்கள் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ட்விட்டரில் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்திருக்கிறது.