தெறிக்கவிடும் "வலிமை" மோஷன் போஸ்டர் - கண்கலங்கிய அஜித் ரசிகர்கள்
நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் அப்டேட்டை கடந்த ஓராண்டாக ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாவதாக தகவல் வெளியானது.
இதனால் உற்சாகமடைந்துள்ள அஜித் ரசிகர்கள் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கினர். மேலும் ட்விட்டரில் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்திருந்தது.
இந்நிலையில் மாலை 6.04 மணிக்கு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இதில் இவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்தில் நாம் டேட் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் ஆனந்த கண்ணீரில் இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடி வருகின்றனர்.