''நாம தடுமாறி விழலாம் ஆனால் , போரில் இருந்து பயந்து மட்டும் ஓடக்கூடாது '' : வெளியானது அஜித்தின் வலிமை மேக்கிங் வீடியோ
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
.வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வலிமை படத்தின் அப்டேட் எங்கே என்று கேட்டுக்கொண்டிருந்த காலம் போய் இப்போது அஜித்தின் ரசிகர்களுக்கு ஒரே அப்டேட்டாக வந்து குவிந்து கொண்டிருக்கிறது
இந்த நிலையில் அதன்படி வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
Dedication And True Inspiration #Ak #Ajith #ValimaiMakingVideo pic.twitter.com/r5dJVxO7xc
— chettyrajubhai (@chettyrajubhai) December 14, 2021
குறிப்பாக அதில் அதில் பைக் வீலிங் செய்யும் ஒரு காட்சியில் வண்டியில் இருந்து அஜித் விழும் காட்சியில் மகாத்மா காந்தியின் வரிகளான : ‘’We may stumble and fall but shall rise again; it should be enough if we did not run away from the battle.” இடம் பெற்றுள்ளது .
தற்போது இந்த அப்டேட்டை கண்ட ரசிகர்கள் போனிகபூருக்கு ட்விட்டரில் புகழாரம் சூட்டி மீம்ஸ்களை தெறிக்க விட்டுள்ளனர் .