பைக்கில் இருந்து தவறி விழுந்த அஜித் - ஆச்சரியமூட்டும் வலிமை மேக்கிங் வீடியோ

valimai ajithkumar வலிமை அஜித்குமார் valimaimakingvideo வலிமைபொங்கல்
By Petchi Avudaiappan Dec 14, 2021 09:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட வலிமை திரைப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போனதாக கூறப்பட்டது. 

மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி படத்தின் பெயரை தவிர எந்த ஒரு அப்டேடும் வெளிவராத காரணத்தால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஃபர்ஸ்ட் சிங்கிள், வலிமை கிளிம்ப்ஸ், இரண்டாம் பாடல் என ஒரே அப்டேட் மழை தான்..இந்த நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியானது. யாரும் எதிர்பாராத வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது .

இதில்  தொடக்கத்தில் வரும் வசனங்கள் கொரோனாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதில் " அனைத்தும் நன்றாக சென்று கொண்டு இருந்தபோது கொரோனா அனைவரின் வாழ்க்கையும் கடினமாக்கியது. மீண்டும் எப்போது நாங்கள் படப்பிடிப்பை தொடங்குவோம் என அனைவரும் ஏங்கினோம் . கடினமான காலகட்டங்களிலும் ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் அன்பை எங்களுக்கு தர தவறவில்லை.

உங்களது அன்பு எங்களை மேலும் வலிமையாக்கியது. அதனால் ஊரடங்கிற்கு பிறகு நாங்கள் மீண்டும் மீண்டு வந்தோம் " என வரிகள் இடம்பெற்றுள்ளது. அது மட்டுமின்றி இந்த வசனங்கள் தோன்றும்போதே "வலிமை அப்டேட் " என ரசிகர்கள் பலரது குரல்கள் ஒலிக்கின்றன. பின்னர் அஜித்குமார் அவர்கள் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் காட்சி தொடங்குகிறது. யாரும் எதிர்பாராத வகையில் படக்குழு அஜித் அவர்கள் முதலில் ஸ்டண்ட் செய்து கீழே விழும் காட்சியை இந்த மேக்கிங் வீடியோவில் படமாக்கியுள்ளனர்.

அப்போது தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகள் தோன்றுகின்றன . அதில் "ஓர் போர்க்களத்தில் நாம் நிலைதடுமாறி கீழே விழுந்தால் போர்க்களத்தை விட்டு ஓடாமல் மீண்டும் எழுந்து போர் செய்தோம் என்பதே போதுமானது " என்ற வரிகள் தோன்றுகின்றன. பின்னர் அஜித்குமார் மீண்டும் அதே காட்சியை வெற்றிகரமாக ஸ்டண்ட் செய்து முடிக்கும் காட்சியுடன் இந்த மேக்கிங் வீடியோ முடிவடைகிறது.

இப்படம் நிறைவு பெறுவதற்குள் பல தடங்கல்கள் வந்தாலும் அஜித்குமார் மற்றும் படக்குழு அனைவரும் அதில் இருந்து மீண்டு வந்து இதை நிறைவு செய்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக காத்திருந்த அஜித் குமாரின் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த மேக்கிங் வீடியோ பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.