உலகளவில், மூன்று மொழிகளில் திட்டமிட்டப்படி ‘வலிமை’ வெளியாகும் - போனி கபூர் ட்வீட் ; ரசிகர்கள் உற்சாகம்

update valimai ajith kumar boney kapoor ak h.vinoth pongal release
By Swetha Subash Jan 04, 2022 08:40 AM GMT
Report

ஜனவரி 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திட்டமிட்டப்படி வலிமை ரிலீசாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள படம் வலிமை. இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்து வழங்குகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இந்த படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இதனையடுத்து படத்தின் ஒரு பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து, படத்தின் Glimpse வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு எடுத்து சென்றது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து ‘ நாங்க வேற மாறி’, அம்மா ஆகிய இருபாடல்கள் வெளியிடப்பட்டது.

மேலும், படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஜனவரி 13-ம் தேதி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசும் தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.

இதனால் படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து தெரிவித்த படத்தின் இயக்குநர் வினோத், தியேட்டர் ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்யும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜனவரி 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திட்டமிட்டப்படி வலிமை ரிலீசாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

போனிகபூர் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான‘ஆர்டிகிள் 15’படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’படத்தை உதயநிதி நடிப்பில் போனிகபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.