வலிமை ஃபர்ஸ்ட் லுக் எப்போ வருது தெரியுமா? வெளியான அப்டேட் இதோ!
அஜித்தின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்பொழுது வெளியாகும் என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஒரேயொரு பைக் ஸ்டண்ட் காட்சியை தான் படமாக்க வேண்டியுள்ளதாகவும். அந்த காட்சியை ஸ்பெயினில் இருக்கும் நிபுணர்கள் உதவியுடன் தான் படமாக்க முடியும் என கூறப்படுகிறது.
தற்போது கொரோனா பரவல் காரணமக படக்குழுவால் ஸ்பெயினுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. அதே சமயம் படத்தின் டப்பிங் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.
ஆனாலும் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் எங்கே என முதல்வர் தொடங்கிஉலகம் முழுவதும் ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.
இந்த நிலையில்தமிழகத்தில் தியேட்டர்கள் திறந்த பிறகே வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியாகும் போதே ரிலீஸ் தேதியை அறிவிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
வலிமை படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. ஆக, இந்த தீபாவளி தல தீபாவளி தான் தல ரசிகர்களுக்கு
தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படமும் வருகிறது என்பது குறிப்பிடதக்கது,