ரசிகர்களுடன் படத்தை பார்த்த படக்குழு

valimaistorm valimaimoviereleased boneyhumaqureshiwatchvalimai
By Swetha Subash Feb 24, 2022 02:15 PM GMT
Report

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் இன்று அதிகாலை திரையரங்குகளில் வெளியானது.

அஜித்குமார் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி இருக்கும் திரைப்படம் வலிமை. பொங்கல் தினத்தன்று இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே வலிமை திரைப்படம் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது.

படத்தின் முதல் காட்சியை காண்பதற்காக அதிகாலை முதலே திரையரங்கில் அஜித் ரசிகர்கள் குவிந்திருந்தனர். கூடியிருந்த ரசிகர்கள் பட்டாசுக்கள் வெடித்தும் மேளம் தாளம் முழங்க ஆட்டம் ஆடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் 90 சதவீத திரையரங்குகளில் வலிமை தான் திரையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் தமிழ்,தெலுங்கு,இந்தி,கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கான ரோஹிணியில் முதல் நாள் முதல் காட்சியை காண படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர், நாயகி ஹுமா குரேஷி மற்றும் படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா ஆகியோர் வந்தனர்.

அவர்களை பார்த்ததும் ஆரவாரம் செய்த ரசிகர்கள் அவர்களை தங்கள் கைத்தட்டலின் மூலமும், விசில் சத்தத்தின் மூலமும் வரவேற்றனர்.

தங்கள் படத்தை ரசிகர்களுடன் பார்த்த படக்குழுவினர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.