ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்த ‘வலிமை’ - ஜீ5-வுக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த படம் 'வலிமை'. இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததன் மூலம் ஜீ5 (ZEE5) ஓடிடி தளம் தனது மிகப்பெரிய ஜாக்பாட்டைப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்று அறிவிக்கப்பட்ட வலிமை படத்தின் ஓடிடி பிரீமியர் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கடந்த 25-ந் தேதி முதல் ஜீ5-இல் ஒளிபரப்பப்பட்டது.
படம் ஒளிப்பரப்ப பட்ட 48 மணி நேரத்திற்குள் 200 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீமிங் நிமிடங்களுடன் ஓடிடி பார்வையாளர்களிடையே திரைப்படம் மீண்டும் பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இந்நிலையில், ஜீ5 தளத்தில் படம் வெளியீட்டின் போது நாடு முழுவதும் வலிமைக்கான விளம்பரப்படுத்தும் வேலைகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்றன, இது கிட்டத்தட்ட ஒரு புதிய திரைப்பட வெளியீட்டிற்கு சமமாகவே கொண்டாடப்பட்டது.
மேலும், கடந்த சில நாட்களாக வலிமை அனைத்து சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து பல ஹாஷ்டேக்’குகளின் கீழ் டிரெண்டிங்கில் உள்ளது.
ஜீ5-இல் படம் ஒளிபரப்பாகும் என்பதை அறிவிக்கும் பிரமாண்டமான 10000 சதுர அடி போஸ்டர் வெளியீடு நாடு முழுவதும் வைரலானது, அதை ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து மும்பையில் அஜித் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டை பைக் பேரணி மூலம் நகரங்கள் தோறும் சென்று கொண்டாடினர். இதில், பைக் பேரணியை கொடியசைத்து நடத்தியவர் வேறு யாருமல்ல, வலிமை படத்தின் கதாநாயகி ஹுமா குரேஷி தான்.
சாலையில் சுறுசுறுப்பான பைக்கர்களுடன், பேரணியின் வீடியோக்கள் மீண்டும் வைரலாகி, நடிகர் அஜித் குமார் மீதான அன்பை வெளிப்படுத்தியது.
You can expect only Mass records for this blockbuster entertainer!! ???
— Boney Kapoor (@BoneyKapoor) March 27, 2022
200 million streaming minutes in 48 hours.#Valimai is now streaming on #ZEE5#AjithKumar#HVinoth@thisisysr@BayViewProjOffl@sureshchandraa@ActorKartikeya#NiravShah#ValimaiOnZEE5 #Valimai pic.twitter.com/l0gpEIzqGn
வலிமை பிரீமியரிங் உரிமம் பெற்றதன் மூலம், ஜீ5 நாட்டின் அனைத்து திசைகளையும் சென்றடைந்து திரைப்பட விளம்பரங்களுக்கான ஒரு அளவுகோலை உருவாக்கியுள்ளது.
மேலும், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பிடித்த ஓடிடி தளமாகவும் மாறி வருகிறது.