ஐரோப்பா கிளம்பும் வலிமை படக்குழு எதுக்கு தெரியுமா?

ajith europe valimai
By Irumporai Jul 13, 2021 09:36 AM GMT
Report

வலிமை படத்தின் சண்டைக் காட்சிகளை படமாக்க ஐரோப்பாவுக்கு பயணிக்கவுள்ளது படக்குழு.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் . இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு இறுதியில் படம்  வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டரை ஜூலை 11-ம் தேதி வெளியிட்டது படக்குழு.

இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ள நிலையில் படத்தில் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய முக்கியமான சண்டைக் காட்சி ஒன்று பாக்கியுள்ளதாக கூறப்படுகிறது .

கொரோனா பரவல் காரணமாக எந்த நாட்டுக்கும் பயணிக்காமல் இருந்த படக்குழு. தற்போது கொரோனா குறையத் தொடங்கியதால், சண்டைக் காட்சியைப் படமாக்குவது என முடிவு செய்துள்ளது.

இந்த சண்டைகாட்சிகளை ஐரோப்பாவில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இதற்காக அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் ஐரோப்பாவுக்கு பயணிக்கவுள்ளனர்.

குறைந்த அளவிலான குழுவினரை மட்டுமே அழைத்துச் சென்று அங்கிருக்கும் குழுவினரைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.