‘நான் பார்த்த முதல் முகம் நீ... நான் கேட்ட முதல் குரல் நீ’ - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘வலிமை’யின் Second Single
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார்.
கடந்த 2019-ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின் அஜித்தும், எச்.வினோத்தும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் தான் வலிமை.
போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா மற்றும் நடிகர்கள் யோகிபாபு, புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
[
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே இப்படடத்தின் டீசர், முதல் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், வலிமை படத்தின் இரண்டாவது பாடலாக அம்மா சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
விக்னேஷ் சிவன் இப்பாடல் வரிகளை எழுதி உள்ளார். ‘நான் பார்த்த முதல் முகம் நீ... நான் கேட்ட முதல் குரல் நீ’ என அஜித் பேசும் வசனத்துடன் தொடங்கும் இப்பாடல் யூடியூபில் டிரெண்டாகி லைக்குகளை அள்ளி வருகிறது.