ஒருவழியாக வெளியானது 'வலிமை' படத்தின் அப்டேட்

valimai-ajith-update-cinima
By Jon Dec 31, 2020 07:19 PM GMT
Report

தல ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தல அவர்கள் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் தான் 'வலிமை'. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்தப்படத்தை சதுரங்கவேட்டை, நேர்கொண்டப்பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த நிலையில் தளபதி ரசிகர்களுக்கு தளபதி அவர்கள் அவ்வப்போது அப்டேட் குடுத்து குஷிப்படுத்தி வந்தார். ஆனால் தல படத்துக்கு பூஜை போட்டதோடு சரி அதன்பிறகு எந்த தகவலும் இல்லை.

ஜனவரிக்குள் படத்தை முடித்து அஜித்தின் 50 வது பிறந்தநாளான மே 1 ஆம் தேதி தியேட்டர்களில் கொண்டுவர கடுமையாக படக்குழு உழைத்து வருகிறது. தற்போது உருவாகிவரும் 'வலிமை' படத்தில் உருக வைக்கும் அம்மா சென்டிமெண்ட் காட்சிகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதற்காகவே, படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனி பாடலை உருவாக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் அஜித் அவர்களின் தாயாக நடிகை சுமித்ரா நடிக்கிறார். இவர் 90களில் சிவாஜி, சிவக்குமார், கமல்ஹாசன், ரஜினி என பலருடன் முன்னணி நடிகையாக நடித்துள்ளார்.

Gallery