‘வலிமை’ படத்தில் அஜீத் வாங்கிய சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா?

Ajith Valimai Salary வலிமை அஜீத் சம்பளம்
By Nandhini Mar 13, 2022 10:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

நடிகர் அஜீத்தின் 60-வது படமாக உருவான படம்தான் ‘வலிமை’. இப்படத்தை போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

அஜீத்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். கடந்த 24ம் தேதி ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ‘வலிமை’ திரைப்படம் வெளியானது. தற்போது, ‘பாக்ஸ் ஆபிஸி’ல் இப்படம் வசூலை குவித்து வருகிறது.

இந்நிலையில், வலிமை படத்திற்காக அஜீத் வாங்கிய சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. வலிமை படத்திற்கு நடிகர் அஜித் குமார் 50 கோடி சம்பவம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இவரை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் 5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

‘வலிமை’ படத்தில் அஜீத் வாங்கிய சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? | Valimai Ajith Salary