வலிமை ஃபர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா?

Valimai Valimai 1st look poster
By Petchi Avudaiappan Jun 26, 2021 11:09 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் அஜித், இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தின் எந்தவித அப்டேட்டும் இதுவரை வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் ’வலிமை’ அப்டேட் கேட்டு அடிக்கடி ட்ரெண்ட் செய்தனர். இதனால், போனி கபூர் அஜித் பிறந்தநாளான கடந்த மே 1 ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவித்தார். ஆனால், கொரோனாவை காரணம் காட்டி மற்றொரு நாளில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என பின்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

வலிமை ஃபர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா? | Valimai 1St Look Poster Update News

இதனிடையே கடந்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் ரசிகர்கள் ‘வலிமை அப்டேட்’ என்று எழுதிய பதாகைகளை தூக்கிக்காட்டினர். மேலும், பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் அஸ்வினிடமும் ‘வலிமை’ அப்டேட் கேட்டனர்.

இந்நிலையில், ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதியில் சென்னை வரும் போனி கபூர் அஜித்தை நேரில் சந்தித்து ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்வார் என்றும், ஜூலை மாதத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.