இன்று காதலர் தினம்..! காதலர்களை சிறப்பிக்கும் கூகுள் டூடுல்

Google Valentine's day
By Thahir Feb 14, 2023 05:00 AM GMT
Report

உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து கூகுள் நிறுவனம் புதிய டூடுல் வெளியிட்டுள்ளது.

புதிய டூடுலை வெளியிட்ட கூகுள் நிறுவனம் 

கூகுள் நிறுவனம் அவவப்போது தனது தேடுபொறியான கூகுள் தளத்தில், பிரபல, ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை இந்த பிரவுசர்களில் வெளியிடுவது வழக்கம்.

valentine-s-day-google-input-tool

ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் ( Valentine's Day) கொண்டாடப்பட்டு வருகிறது. சமீப காலமாக உலகம் முழுவதும் காதலர் தினம் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய டூடுல் வெளியிட்டுள்ளது.