வாஜ்பாயின் நினைவு தினம் - ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக் குறைவு காரணமாகக் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலமானார்.
PM Narendra Modi, President Ram Nath Kovind, and Vice President Venkaiah Naidu pay tribute to former PM Atal Bihari Vajpayee on his death anniversary, at 'Atal Samadhi Sthal' in Delhi pic.twitter.com/vgZ36XPOns
— ANI (@ANI) August 16, 2021
1998 முதல், 1999 வரை, 13 மாதங்கள், பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில், பிரதமராக பதவி வகித்த இவர் 1999- 2004 வரை, மீண்டும் பாஜக ஆட்சியில் பிரதமராக இருந்தார்.
லோக்சபாவிற்கு, 10 முறையும், ராஜ்யசபாவுக்கு, 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

அத்துடன் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி டெல்லி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

வாஜ்பாயின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.