சசிகலாவை சந்தித்த வைத்திலிங்கம் - எதர்ச்சியான சந்திப்பு என விளக்கம்
சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் இது ஒரு எதர்ச்சையான சந்திப்பு என விளக்கம் அளித்துள்ளார்.
சசிகலாவை சந்தித்த வைத்திலிங்கம்
அதிமுகவின் தலைமை அலுவலகமும் நீதிமன்ற உத்தரவுப்படி எடப்பாடி பழனிசாமி இடம் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து நேற்று அதிமுக தலைமை அலுவலகம் சென்றார் இபிஎஸ்.
இந்த நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் தீவர ஆதரவாளரான வைத்தியலிங்கம் சசிகலாவை நேரில் சந்தித்தார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சசிகலாவுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்தியலிங்கம் நேரில் சந்தித்தார்.

இதையடுத்து சசிகலா அவருக்கு 5 ஸ்டார் சாக்லெட் வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள வைத்திலிங்கம் இது ஒரு எதர்ச்சியான சந்திப்பு என்று தெரிவித்துள்ளார்.