வயிறு வெடித்து இறந்தாரா வைரவன்? அப்படி பண்னாதீங்க - கதறி அழுத மனைவி!

Tamil Cinema Death
By Sumathi 1 மாதம் முன்

வைரவனின் இறப்பு குறித்து தவறான செய்திகள் பரப்பியதால் அவரது மனைவி வேதனை அடைந்துள்ளார்.

வைரவன் இறப்பு

'வெண்ணிலா கபடி குழு' படத்தில், துணை நடிகராக வந்த வைரவன் சிறிது நாட்களுக்கு முன்னர் காலமானார். இந்நிலையில் அவரது இறப்பு குறித்து பல தவறான செய்திகள் பரவிய வண்னம் இருந்தது. இதுகுறித்து அவரது மனைவி கவிதா, “வைரவன் இறந்த அடுத்த இரண்டு நாட்கள் வந்த வீடியோக்கள் அனைத்தையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

வயிறு வெடித்து இறந்தாரா வைரவன்? அப்படி பண்னாதீங்க - கதறி அழுத மனைவி! | Vairavan Wife Talk About The False Claims Of Death

எல்லாருமே நல்லபடிகாயத்தான் செய்திகளை போட்டிருந்தார்கள். ஆனால் ஒரு தனியார் ஊடகத்தில், ‘வைரவன் வயிறு வெடித்து’ இறந்ததாக கூறியிருந்தார்கள். ஒருவரது வாழ்க்கை குறித்து அவர்கள் கூறாத ஒரு விஷயத்தை செய்தியாக போடுவது மிகவும் தவறு. பொது அறிவு இருப்பவர்கள் யாராவது இப்படி பேசுவார்களா?

மனைவி ஆதங்கம்

வயிறு வெடித்து இறந்த உடலை எப்படி இறுதி சடங்கில் வைத்திருக்க முடியும். அது மட்டுமன்றி, என் மகளை என்னுடைய கணவர் மரணப் படுக்கையில் இருந்த போது அழைத்து பேசியதாகவும், ’அம்மாவை நல்லா பாத்துக்கோ’ என்று அவர் கூறியதாகவும் பல செய்திகளை கூறிவருகின்றனர்.

எனது மகளுக்கு அவளுடைய அப்பா இறந்த விஷயமே தெரியாது. இப்படியெல்லாம் பொய் செய்திகளை பரப்புவது என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. இவ்வாறு நடக்காத விஷயங்களை நடந்ததாக கூறிய ஊடகங்கள்,

எனக்கு பதில் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் நான் நீதிமன்றத்திற்கு போவேன்” என கண்னீர் மல்க தெரிவித்துள்ளார்.