வைரலாகும் வைரமுத்துவின் பதிவு

Vairamuthu
By Fathima Jun 09, 2026 05:27 AM GMT
Report

மே 4ம் தேதி ஒரு நாள் மட்டும் தான் முக ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார், ஆனால் கொளத்தூர் தொகுதி மக்கள் 365 நாட்களும் தோற்கடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த கலைஞரின் 103வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வைரமுத்து பேசுகையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோற்றிருந்தாலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தோற்றிருக்கக்கூடாது, வானம் தேய்ந்துவிடக்கூடாது, இது தான் என்னுடைய ஆதங்கம்.


கொளத்தூர் தொகுதியை சிங்கப்பூரின் ஒரு தொகுதியாக மாற்றியிருக்கிறார் முக ஸ்டாலின், தோல்விக்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என அவர் கூறியது என் இதயத்தில் அதிர்வை ஏற்படுத்தியது.

மே 4ம் தேதி ஒரு நாள் மட்டும் தான் முக ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார், ஆனால் கொளத்தூர் தொகுதி மக்கள் 365 நாட்களும் தோற்கடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

வைரலாகும் வைரமுத்துவின் பதிவு | Vairamuthu X Post Viral  

இதுகுறித்து எக்ஸ் தள பதிவில், தோல்வியில் வழி காண்கிறவன் மேதை, பழி போடுகிறவன் கோழை, இயக்கங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் தோல்வி என்பது ஆசான்.

தோல்வி என்பது சோர்வதற்கல்ல, ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல, தோல்வியை தூர நிறுத்திவிட்டு மக்களை பக்கத்தில் அழைத்துக்கொள்வார் கலைஞர், அதையே பின்பற்றுங்கள் வெற்றி என்பது பெற்றுக்கொள்ள, தோல்வி என்பது கற்றுக்கொள்ள என குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகும் வைரமுத்துவின் பதிவு | Vairamuthu X Post Viral