இந்தித் திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் - அழைப்பு விடுத்த கவிஞர் வைரமுத்து...!

Twitter Vairamuthu
By Nandhini Oct 25, 2022 07:26 AM GMT
Report

இந்தித் திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கவிஞர் வைரமுத்து தமிழ்க் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

தமிழ் எங்கள் மானம்

இந்தித் திணிப்பு அவமானம்

26.10.2022 அன்று காலை 9 மணிக்கு

இந்தித் திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

வள்ளுவர் கோட்டம்,

வல்லவர் கோட்டம் ஆகட்டும்

தமிழ் எங்கள் அதிகாரம்

இந்தித் திணிப்பு சர்வாதிகாரம்

என்ற முழக்க எட்டுத் திசையும் எட்டட்டும்

வான்முட்டும் ஓசை தேன்சொட்டும்

தமிழுக்குக் காப்புக் கவசம் கட்டட்டும்

துடித்துக் கிடக்கும் தமிழர்களே

வெடித்துக் கிளம்புங்கள்

இவ்வாறு டுவிட்டரில் தமிழ்க் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.   

vairamuthu-twitter-protest