தமிழக அரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழர்களை நியமிப்பது பாராட்டுக்குரியது - கவிஞர் வைரமுத்து!
தமிழக அரசின் தலைமைப் பொநுப்புகளில் தமிழர்களை நியமிப்பது பாராட்டுக்குரியது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
புதிய டிஜிபியாக பொறுப்பேற்றிருக்கும் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
தமிழ்நாட்டரசின் தலைமைப்
— வைரமுத்து (@Vairamuthu) June 30, 2021
பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள்
நியமனம் பெறுவது பேரியக்கத்தின் பெருங்கனவை நனவுசெய்வதாகும்
பதவி கண்டவர்கள்
பாராட்டுக்குரியவர்கள்
பதவி தந்தவர்கள்
நன்றிக்குரியவர்கள்
”தமிழ்நாட்டரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள் நியமனம் பெறுவது பேரியக்கத்தின் பெருங்கனவை நனவுசெய்வதாகும். பதவி கண்டவர்கள் பாராட்டுக்குரியவர்கள்
பதவி தந்தவர்கள் நன்றிக்குரியவர்கள்” என்று பாரட்டியுள்ளார்.