பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: விஜய்க்கு வைரமுத்து நன்றி
Lyricist Vairamuthu thanked Chief Minister Vijay: இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, கடந்த யூன் மாதம் 10ம் தேதி உயிரிழந்தார், அவரது உடல் தேனியில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பாரதிராஜாவுக்கு தேனியில் மணிமண்டபம் கட்டப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் நேற்று அறிவித்தார்.

இதனை பாராட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்டும் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாட்டு அரசுக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் கோரிக்கையை முதலில் முன்வைத்தவன் என்ற முறையில் என் முதல் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அல்லி நகரத்தின் கலாசாரத்துக்கு டெல்லி நகரத்து அங்கீகாரம் பெற்றுத்தந்த பெருங்கலைஞர் பாரதிராஜா அடித்தட்டு மக்களின் கனவுகளை நம்பிக்கைகளை வாழ்வியலை விழுமியங்களைக் காட்சிப் படுத்திய கலைப் பெருமகன் அவருக்கான மணிமண்டபத்தை அவர் பிறந்த தேனி மாவட்டத்திலேயே அமைப்பது என்பது அவருக்கு அரசு வழங்கும் கடைசி மரியாதையாகும்
தமிழ்நாட்டு அரசுக்கு
என் முதல் மரியாதை
மீண்டும் நன்றி.