“காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்” : வைரமுத்துவினையும் விட்டு வைக்காத பெட்ரோல் டீசல் விலை!
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை சதம் விளாசியுள்ளது. தொடர்ந்து 9வது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுக்க உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கடும் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் நிகழ்வுகளை காமெடியாக சித்தரித்து கருத்து தெரிவிக்கும் மீம் கிரியேட்டர்கள். இயற்கை படத்தில் இடம் பெற்ற 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு; என்ற பாடலையும் பாடலின் காட்சிகளையும் வைத்து கிண்டல் செய்து வந்தனர்.

இந்த மீம் இணையத்தில் வைரலாக இந்த பாடலை எழுதிய வைரமுத்து இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட் பதிவில் என் பாட்டு வரியை மாற்றிஎனக்கே அனுப்புகிறார்கள் 'காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ #PetrolDieselPriceHike என்று பதிவிட்டுள்ளார், இயற்கை படம் வந்து பல ஆண்டுகள் ஆனாலும் காதல் பாடலான இந்தபாடல் பெட்ரோல் டீசல் விலையினால் இணையத்தில் நகைச்சுவையாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.
என் பாட்டு வரியை மாற்றி
— வைரமுத்து (@Vairamuthu) February 17, 2021
எனக்கே அனுப்புகிறார்கள் :
'காதல் வந்தால் சொல்லி அனுப்பு;
பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’#PetrolDieselPriceHike