மூடிக் கிடந்த வானத்தின் முதல் கீற்று : பாரதிராஜாவுடன் வைரமுத்து வைரலாகும் புகைப்படம்

Vairamuthu Bharathiraja
By Irumporai Sep 11, 2022 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.

மருத்துவமனையில் பாரதிராஜா

 அவரது உடல் நிலை மோசமானதால் உயர் சிகிச்சைக்காக ,அமைந்தகரையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே மூன்று வார சிசிக்சைக்கு பின்னர் இயக்குநர் பாரதிராஜா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்ற பாரதிராஜா தற்போது முழு நேர ஒய்வில் உள்ளார்.

இதனையடுத்து தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், நீலாங்கரையில் உள்ள இவர் இல்லத்திற்கு நேற்று சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருடன் கவிஞர் வைரமுத்து, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரும் சென்றிருந்தனர்.

மூடிக் கிடந்த வானத்தின் முதல் கீற்று

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மீண்டும் புன்னகை மூடிக் கிடந்த வானத்தின் முதல் கீற்று நம்பிக்கை எழுதிய நல்லோவியம்.

"இவுக பொழப்புக்கு நீர் வார்க்கத்தான் ஈசானி மூலையில மேகம் இருக்கு" என பதிவிட்டு முகத்தில் மகிழ்ச்சி பொங்க பாரதிராஜா காரில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.