இதை கவனிச்சீங்களா - நிதியமைச்சர் குறித்து வைரமுத்து பரபரப்பு பதிவு!

Smt Nirmala Sitharaman Vairamuthu Budget 2024
By Vidhya Senthil Jul 26, 2024 07:25 AM GMT
Report

 நிதிநிலை அறிக்கையில் குறள் ஒன்று கூறுவது எழுதாத மரபு

பட்ஜெட் கூட்டத்தொடர்

2024 ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரையில் 19 அமர்வுகளாக நடைபெற உள்ளது.அதன்படி,நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 23 ஆம் தேதி நடைபெற்றது அப்போது 2024 -25 ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதை கவனிச்சீங்களா - நிதியமைச்சர் குறித்து வைரமுத்து பரபரப்பு பதிவு! | Vairamuthu Post On Budget 2024 25

அதில்,புதிய திட்டங்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தங்கம், வெள்ளி, சுங்க வரி குறைப்பு, வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு, வருமான வரி என பல்வேறு துறைகளின் வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் 2024 -25 ஆண்டுக்கான முழு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த ஒரு நலத்திட்டமும் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில் இல்லை என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.மேலும் தமிழகத்திற்கு மத்தியஅரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழக அரசியலை தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர் .

தோல்வி பயத்தில்...வன்மத்தை கக்குகிறார்கள் - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தோல்வி பயத்தில்...வன்மத்தை கக்குகிறார்கள் - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

கவிஞர் வைரமுத்து

இந்த நிலையில் ,நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி கவிஞர் வைரமுத்து விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள த்விட்டேர் பதிவில்,''

 ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் உரிமையும் நியாயமும் தேவையும் உள்ள தமிழ்நாடு போகிற போக்கில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது இது அறிந்தே செய்யும் அநீதி தனக்கு எதிராகக் குடைபிடித்தவனுக்கும் சேர்த்தே பொழிவதுதான் மழையின் மாண்பு மழை மாண்பு தவறிவிட்டது நிதிநிலை அறிக்கையில் குறள் ஒன்று கூறுவது எழுதாத மரபு. இவ்வாண்டு விடுபட்டுள்ளது எழுத வேண்டிய குறள் என்ன தெரியுமா? “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்று பதிவிட்டுள்ளார்.