பாற்கடல் போல் தமிழில் பொங்குவார் - நெல்லை கண்ணன் மறைவு; வைரமுத்து இரங்கல்
‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நெல்லை கண்ணன் மறைவு
‘தமிழ்க்கடல்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் (77) உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.
நெல்லை கண்ணன், தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், அரசியல்வாதியுமாக இருந்து வந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தன் இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நெல்லை கண்ணன் இன்று உயிரிழந்துள்ளார்.
இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து புகழாரம்
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து நெல்லை கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர், பாற்கடல் போல் தமிழில் பொங்குபவர் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன். சமக்காலத்தின் தமிழ்க்கடல் வற்றிவிட்டது என்றே கருதுகிறேன். சமூகத்திற்கு தமிழ் உணர்வை ஊட்டிக்கொண்டே இருந்தவர் நெல்லை கண்ணன் புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழறிஞர்
— வைரமுத்து (@Vairamuthu) August 18, 2022
நெல்லை கண்ணன் மறைவு
நெடுந்துயரம் தருகிறது
சங்க இலக்கியம் சாற்றியவர்
கம்பரைக் காட்டியவர்
பாரதியைப் போற்றியவர்
பாவேந்தரை ஏற்றியவர்
கண்ணதாசனை நாட்டியவர்
மறைந்துற்றார்
யார் அவர்போல்
பேசவல்லார்?
அவர்போன்ற
எள்ளல்மொழி வள்ளல்
இனி எவருளார்?
ஏங்குகிறேன்;
இரங்குகிறேன் pic.twitter.com/2ZzRjKNsQ8