எழுந்தாலும், விழுந்தாலும் உன்புகழே பாடுகிறேன் : கவிஞர் வைரமுத்து உருக்கம்!
மறைந்த முன்னாள் கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அத்துடன் மறைந்த சி.ஐ.டி காலனி இல்லத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து கோபாலபுர இல்லத்திலும் மு.க. ஸ்டாலின் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
“உன்
நினைவிடத்தில் நிற்கிறேன்
உன் தமிழை
மொழிபெயர்த்துக்
கொண்டேயிருக்கிறது கடல்
நானும் அலைதான்
எழுந்தாலும்
விழுந்தாலும்
உன்புகழே பாடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
உன்
— வைரமுத்து (@Vairamuthu) August 7, 2021
நினைவிடத்தில் நிற்கிறேன்
ஓயாத அலைகளால்
உன் தமிழை
மொழிபெயர்த்துக்
கொண்டேயிருக்கிறது கடல்
நானும் அலைதான்
எழுந்தாலும்
விழுந்தாலும்
உன்புகழே பாடுகிறேன்#Remembering_kalaignar pic.twitter.com/SwJOzssEDH
பின்னர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற வைரமுத்து மரியாதை செலுத்தினார்.