"விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது": கேவி ஆனந்த் மரணத்துக்கு வைரமுத்துவின் கண்ணீர் கவிதை
பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் மரணத்திற்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் கண்ணீர் கவிதை ஓன்றை எழுதி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்தின் மறைவால் கேமரா கேவிக்கேவி அழுவதாக கவிஞர் வைரமுத்து கண்ணீர் இரங்கம் வடித்துள்ளார். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும், சிறந்த இயக்குநருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
54 வயதான கே.வி. ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் .
இவரது மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
வருந்துகிறேன் நண்பா!
— வைரமுத்து (@Vairamuthu) April 30, 2021
திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!
வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!
என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!
இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?
விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!
ஒளியாய் வாழ்வாய்
இனி நீ.