நான் கெஞ்சி கேக்குறேன்...இதையெல்லாம் ஏன் கேட்கணும்!! மீண்டும் சீண்டும் வைரமுத்து
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் குறித்து மறைமுகமாக பேசியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
வைரமுத்து பேச்சு
சென்னையில் நடைபெற்ற படத்தின் விழா ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஒரு படத்தினை எவ்வாறு அமல்படுத்துதல், நெஞ்சில் தைப்பது போல் காட்சி அமைத்தல் என்பதே சினிமா. எங்களுக்கு தலைப்பு புதிதல்ல.
நான் எழுதிய பாடல்கள் சில படங்களுக்கு தலைப்பாகியுள்ளது. என்னை ரகசியமாக எத்தனை பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று அறிய மாட்டேன். நீதானே என் பொன்வசந்தம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்றவை என் பாட்டில் இருந்து வந்தவையே. இவர்கள் யாரும் வைரமுத்துவை வந்து பார்த்தோ, தொலைபேசியில் பேசவோ இல்லை.
கெஞ்சி கேட்கிறேன்...
ஆனால், அத்தனை பேரும் வைரமுத்து நமக்கானவர், ஏன் கேட்க வேண்டும் என்ற உரிமையில் இவ்வாறு செய்கிறார்கள். அவர்களுக்கு ஜெயகாந்தன் பாணியில், ஏன் கேட்க வேண்டும் இல்லாதவர்கள் எடுத்து கொள்கிறார்கள் என்பதே.
நான் கெஞ்சுகிறேன், உங்களை அன்போடு பரிந்துரைக்கிறேன் நல்ல தமிழில் பெயர் வையுங்கள். ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் தான் பட ஓடுகிறது என்று நீங்கள் சான்று கொடுத்தால் நான் ஏற்கிறேன்.
இவ்வாறு வைரமுத்து பேசினார்.
இதுவும் காப்புரிமை சம்மந்தப்பட்ட விஷயமே என ரசிகர்கள் கருத்துக்களை பகிர விடுகிறார்கள். காரணம், தன்னிடம் யாரும் உரிமை கேட்டு தனது படைப்புகளை பயன்படுத்தவில்லை என வைரமுத்து குறிப்பிடுவது இளையராஜா விஷயத்தில் தான் என பேச துவங்கி விட்டனர் ரசிகர்கள்.