சமூகநீதிக்கு எதிரானது நீட்..கையெழுத்திட்டத்தில் கர்வம்கொள்கிறேன்..! கவிஞர் வைரமுத்து!!
நீட் விலகிற்கு எதிரான கை எழுத்து இயக்கத்தில் கவிஞர் வைரமுத்து இன்று தனது கையெழுத்தை இட்டுள்ளார்.
நீட் விலக்கு
தமிழகத்தில் இருந்து நீட் தேர்விற்கு விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக சார்பில், கை எழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைத்த இதில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சிகள், பொதுமக்கள் என பலரும் தங்களது கையெழுத்தை பதிவிட்டு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
வைரமுத்து ஆதரவு
இந்நிலையில் இன்று இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது கையெழுத்தை இட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் வைரமுத்து கையெழுத்திட்டார்.
நீட் தேர்வுக்கு எதிராக எனது கையெழுத்தும் இடம் பெறுவதில் மகிழ்ச்சி தெரிவித்தார். தேர்வெழுதியே மாணவர்கள் வாழ்நாள் கழிந்துவிடுகிறது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும் எனவும் கூறியுள்ளார்.