''தமிழ்நாட்டில் இளையராஜாவையும் அரசின் கண்களுக்கு காட்டுவோம்'' - வைரமுத்து அதிரடி ட்வீட்

DadasahebSuperstarRAJINI BharathiRaja ilaiyaraaja
By Irumporai Oct 27, 2021 06:14 AM GMT
Report

67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் ,  பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ”

 ''பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம். நடிகர் ரஜினிகாந்த் நன்றி கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையாராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்'என்று குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும் நீண்ட வருடங்களாக பிரச்னை இருந்து வருகிறது. ஆனாலும் இளையராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வைரமுத்து கோரிக்கைவிடுத்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.