சுழல்வாள் எடு ..சூழ்ச்சியை உடைத்து ராஜாங்கம் நடத்து : முதலமைச்சருக்கு வைரமுத்து வாழ்த்து

M K Stalin DMK
By Irumporai Oct 11, 2022 04:45 AM GMT
Report

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழு கூட்டம்

திமுகவின் அமைப்பு ரீதியான தேர்தல் நடந்து முடிந்த நிலையில் கடந்த 9ம் தேதி திமுக பொதுக்குழு கூடியது. இதில் திமுக தலைவராக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து கூட்டத்தில் வாழ்த்துரைகள் , ஏற்புரைகளுக்கு பின் நிறைவாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது , அதில் முதலமைச்சர் ஸ்டாலின் .

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல இருக்கிறது என் நிலைமை. மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளும், முழு மூத்தவர்களோ, அமைச்சர்களும் நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது?

உங்கள் செயல்பாடுகள் கட்சிக்கும் , உங்களுக்கும் பெருமை தேடி தர வேண்டுமே தவிர , சிறுமைப்படுத்துவதாக அமையக்கூடாது. பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக கழகம் பழிகளுக்கும், கிண்டலுக்கும் ஆளானது என கண்டிப்பாகவும், மனவேதனையுடன் கூறியிருந்தார்.

சுழல்வாள் எடு ..சூழ்ச்சியை உடைத்து ராஜாங்கம் நடத்து : முதலமைச்சருக்கு வைரமுத்து வாழ்த்து | Vairamuthu Congratulates The Cm Stalin

இதையடுத்து திமுக தலைவராக ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் தனது ட்விட்டர் பதிவிலும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கவலை ஏன் உனக்கு

அதில், 

தி.மு.க தலைவராய் மீண்டும் மகுடம் பூண்ட முதலமைச்சரை இல்லத்தில் சந்தித்து வாழ்த்துரைத்தேன்

எருதுபோல் உழைப்பு ஏழைபோல் உணவு திராவிடத் தினவு தீராத கனவு கவலை ஏன் உனக்கு? கால்மாட்டில் கிழக்கு சுழல்வாள் எடுத்து சூழ்ச்சியை உடைத்து,ரெளத்திரம் படைத்து ராஜாங்கம் நடத்து " என்று பதிவிட்டுள்ளார். 

வைரமுத்துவின் இந்த பதிவு முதலமைச்சருக்கு உள்ள நெருக்கடியினை உணர்ந்து ஆதரவாக வைரமுத்து  கூறியுள்ளதாக இணையவாசிகள் மற்றும் கட்சியினர் கூறிவருகின்றனர்.