தளபதி மகனே வருக..தமிழர்க்கு மேன்மை தருக! - அமைச்சர் உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து
அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமைச்சரானார் உதயநிதி
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவருக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் அமைச்சர் பதவியை இன்று முறைப்படி ஏற்றுக் கொண்டார் அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
வைரமுத்து வாழ்த்து
அவருக்கு அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், மற்றும் குடும்பத்தினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
உள்ளங்கவர் உதயநிதி!
கலைஞர் குடும்பம்
உங்களுக்குத் தந்தது
அறிமுகம் மட்டும்தான்
இன்னொரு முகம் இருக்கிறது;
அறிவு முகம்;
செயலால் மட்டுமே அடைவது
உங்கள் செயலால்
வாரிசு என்ற
வசை கழியுங்கள்
தளபதி மகனே வருக
தமிழர்க்கு மேன்மை தருக
அமைச்சர் உதயநிதிக்கு
வாழ்த்துக்கள்
என்று தனது ட்விட்டர் பக்கதில் தெரிவித்துள்ளார்.
உள்ளங்கவர் உதயநிதி!
— வைரமுத்து (@Vairamuthu) December 14, 2022
கலைஞர் குடும்பம்
உங்களுக்குத் தந்தது
அறிமுகம் மட்டும்தான்
இன்னொரு முகம் இருக்கிறது;
அறிவு முகம்;
செயலால் மட்டுமே அடைவது
உங்கள் செயலால்
வாரிசு என்ற
வசை கழியுங்கள்
தளபதி மகனே வருக
தமிழர்க்கு மேன்மை தருக
அமைச்சர் உதயநிதிக்கு
வாழ்த்துக்கள் pic.twitter.com/xrr9ZnsN7F