முதல்வர் ஆகிறார் ஸ்டாலின்? வாழ்த்து கூறிய வைரமுத்து
தற்போதைய நிலவரப்படி, 140க்கும் அதிகமான இடங்களில் திமுக முன்னிலை வகிப்பதால் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது, இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை நிலவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதில் திமுக கூட்டணி மட்டும் 145 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, அதிமுக கூட்டணி 88 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதனை கொண்டாடும் விதமாக அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் குவிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
#முகஸ்டாலின்எனும்நான் போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது, இந்நிலையில் கவிஞர் வைரமுத்து முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளை கூறியுள்ளதுடன், அவர் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.