‘பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது’ - வைகோ கருத்து

Vaiko A. G. Perarivalan
By Swetha Subash May 18, 2022 10:02 AM GMT
Report

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமா்வு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிப்பதாக இன்று தீர்ப்பளித்தது.

‘பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது’ - வைகோ கருத்து | Vaiko Welcomes The Verdict Of Perarivalan Release

இதனை தொடர்ந்து பலரும் உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தீர்ப்பு குறித்து ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ, “பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது.உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டி உள்ளது” என தெரிவித்துள்ளார்