முன்புபோல இயங்க முடியுமா?? மருத்துவமனையில் இருந்து உருக்கமாக பேசிய வைகோ!!

Vaiko
By Karthick May 29, 2024 02:28 AM GMT
Report

தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாக தொடர்ந்து பல விதமான செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தன.

அது தொடர்பாக, துரை வைகோ தற்போது வைகோ மருத்துவமனையில் இருந்து பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வைகோ வீடியோ

அவ்வீடியோவில் வைகோ அவர்கள் பேசியது வருமாறு,

அன்புள்ளம் கொண்ட தமிழ் பெருமக்களே, தமிழகத்தில் பொது ஊழியம் செய்கிற ஒரு சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ ஏறத்தாழ 7 ஆயிரம் கிலோமீட்டர் நடந்திருக்கிறேன், ஆனால் கீழே விழுந்ததில்லை. இப்பொழுது நான்கு நாட்களுக்கு முன்னால் நெல்லைக்குச் சென்றிருந்த இடத்தில் தங்கியிருந்த வீட்டில் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்தில் இருக்கக்கூடிய திண்ணையிலே ஏறினேன்.

vaiko video from hospital

அப்படியே அலைமலைத்து இடது புறமாக சாய்ந்து விட்டேன். எனக்கு தலையில் அடிபட்டிருந்தாலோ, முதுகெலும்பில் அடிபட்டிருந்தாலோ நான் இயங்க முடியாமல் போயிருப்பேன். இடது தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து இருக்கிறது, அதோடு அந்த எலும்பும் கீறி இருக்கிறது. அதனால் அங்கே உடனே மருத்துவரிடம் காண்பிக்க ,மருத்துவர் உடனே நீங்கள் சென்னைக்கு போக வேண்டும், அங்கே நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பரிபூரண ஆரோக்கியத்தோடு..

உடனே சென்னை மருத்துவருக்கு வாட்ஸ்ஆப்'பில் X-ray எடுத்து அனுப்ப, அவர் பயப்பட வேண்டாம் உங்களுக்கு ரெஸ்ட் தேவை. உங்களுக்கு ரெஸ்ட் இதில் கிடைத்திருக்கிறது என்று சொன்னார்கள். ஒருவேளை எனக்கு நாளைக்கே அறுவை சிகிச்சை நடைபெற்று அந்த கிண்ணம் தோள்பட்டையில் இருந்து விலகி இருக்கிறதல்லவா அதை திரும்ப பொருத்தி விட்டு, அதோடு சேர்ந்து எலும்பும் ஒரு இரண்டு சென்டிமீட்டர் உடைந்திருக்கிறது.

vaiko video from hospital

அதற்கும் சேர்த்து நாளைக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று டாக்டர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன். முழு ஆரோக்கியத்தோடு இருக்கிறேன். எனக்கு முன்புபோல இயங்க முடியுமா என்ற ஐயம் யாருக்கும் வர வேண்டாம்.நான் உழைப்பு என்பதற்கு இலக்கணமாக இருக்கக்கூடியவன் என்பதை கலைஞரே சொல்லி இருக்கிறார்.

va

ஆகவே நம்முடைய தோழர்கள், பொதுவாழ்வில் அக்கறை உடையவர்கள் எல்லோருக்கும் நான் சொல்லிக் கொள்வது இந்த நாட்டில், மேலும் தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டிய சேவைகள் செய்வதற்கு காத்திருக்கும் வைகோ, முழு நலத்தோடு பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன் என்பதையும் எனக்காக கவலைப்படுகிற உள்ளங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்பதையும் இந்த நேரத்தில் சொல்கிறேன்