திருமாவளவன் கருத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - கிண்டல் செய்த வைகோ

M K Stalin Thol. Thirumavalavan Vaiko Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jul 08, 2026 11:54 AM GMT
Report

திருமாவளவன் கருத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என வைகோ கிண்டல் செய்துள்ளார்.

ஸ்டாலின் உடன் நட்பு தொடரும்

திமுக கூட்டணியில் போட்டியிட்டு தேர்தலை சந்தித்த விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு ஆதரவளித்து அமைச்சரவையில் பங்குபெற்றுள்ளது.

இரு கம்யூனிஸ்ட்களும் வெளியில் இருந்து ஆதரவளித்தாலும், அமைச்சரவையில் இடம்பெறவில்லை. மற்றொரு கட்சியான மதிமுகவும் தவெகவிற்கு ஆதரவளித்து, திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. 

திருமாவளவன் கருத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - கிண்டல் செய்த வைகோ | Vaiko Trolls May Give Nobel For Thirumavalvan

இந்நிலையில், தவெக வெற்றி பெற்றதில் எங்களுக்கு உள்ளூர மகிழ்ச்சி இல்லை. ஏனெனில் நாங்கள் திமுக கூட்டணியில் இருந்தோம். தற்போதும் திமுக உடன் நட்பு தொடர்கிறது.

தவெக அமைச்சரவையில் நாங்கள் சேர்ந்ததால் கூட்டணியில் இணைந்ததாக பொருள் இல்லை" என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். 

திருமாவளவன் கருத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - கிண்டல் செய்த வைகோ | Vaiko Trolls May Give Nobel For Thirumavalvan

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், "அமைச்சரவையில் இடம்பெற்றாலே தவெக கூட்டணியில் விசிகவும் ஒரு பகுதி தான். கூட்டணி தொடர்பாக திருமாவளவன் வார்த்தைகளில் விளையாட்டு வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

வைகோ கிண்டல்

கூட்டணி குறித்த திருமாவளவனின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "இது நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து” என கிண்டல் செய்துள்ளார். 

திருமாவளவன் கருத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - கிண்டல் செய்த வைகோ | Vaiko Trolls May Give Nobel For Thirumavalvan

மேலும், "இந்த ஆட்சி 6 மாதம்கூட நீடிக்காது என சாபம் விட்டார்கள். இப்போது அந்த 6 மாதம் கூட பொறுக்க முடியாமல், ஆளுநரிடம் சென்று ஆட்சியை கலைக்க வேண்டும் என திமுக புகார் கொடுக்கிறது.

ஆளுநர் ஆட்சி வந்தால், பாஜக தானே ஆட்சி செய்யும். பாஜக ஆட்சி செய்தாலும் பரவாயில்லை. தவெக ஆட்சியில் இருக்கக் கூடாது என திமுக நினைக்கிறது" என பேசியுள்ளார்.