பொற்கால ஆட்சி மலர்கின்றது; தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி! - வைகோ அறிக்கை

vaiko dmk victory thank tn people
By Praveen May 02, 2021 04:55 PM GMT
Report

 தமிழகத்தில் பொற்கால ஆட்சி மலர்ந்துள்ளதாக மதிமுக கட்சி தலைவர் வைகோ அவர்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தை, நம் அன்னைத் தமிழைக் கப்பி இருந்த காரிருள் நீங்கி, உதயசூரியன் ஒளியுடன் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறந்து உள்ளது. வட ஆரிய சக்திகளின் ஆதிக்கத்திற்கு, தமிழ் மண்ணில் இடம் இல்லை என்ற முழக்கம் விண் அதிர எங்கும் எதிரொலிக்கின்றது.

வெற்றியைத் தவிர வேறு இல்லை என்று, திராவிட இயக்க உணர்வாளர்கள் பூரித்து மகிழ்கின்றனர். அன்புச் சகோதரர், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொற்கால ஆட்சி மலர்கின்ற நிலை உருவாகி இருப்பதை எண்ணி மகிழ்கின்றேன்.

வெற்றிகள் தொடரட்டும்; பணிகள் தொடங்கட்டும்; தொடர்ந்து நிகழட்டும்; புதிய வரலாறு படைக்கட்டும் என இந்தப் பொன்னான வேளையில், என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதுணையாக இருக்கும்.

ஆட்சி மாற்றத்திற்கு வாக்கு அளித்த. தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.