மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி ; வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்
மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வைகோ தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் தற்போது கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 28 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்து வருகிறது. சி
கிச்சை பெறுபவர்களில், 94.8 சதவீதம் பேர் வீட்டு தனிமையிலும், 5.2 சதவீதம் பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
இதில் அவருக்கு தொற்று கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் , வைகோ தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்து- மாத்திரைகளை உட்கொண்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.